கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலத்தில் அமைதியான முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்தை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார்.


மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரம் இம்முறை எங்கும் இல்லாத அளவுக்கு அனல் பறந்தது.

பிரதமர் மோடியும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்துக் கொண்டனர்.

அமித்ஷா கூட்டத்தில் வன்முறை நிகழ்ந்ததால், தேர்தல் பிரச்சாரத்தை ஒரு நாள் முன்னதாக முடித்துக் கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இந்நிலையில், தேர்தல் ஆணையத்துக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எழுதியுள்ள கடிதத்தில், மேற்கு வங்க மாநிலத்தில் இறுதி கட்ட வாக்குப்பதிவை அமைதியான முறையில் நடத்தி முடிக்க வேண்டும்.
நடுநிலையோடு மத்தியில் ஆளுவோரின் குறுக்கீடு இல்லாமல் தேர்தலை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.