புதுடெல்லி:

தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்படலாம் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.


தமிழகம், மகாராஷ்ட்ரா, கர்நாடகா, குஜராத், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலத்தில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படலாம் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

அணைகளில் நீரின் அளவு குறைந்துவிட்டதால் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பம் நிலவுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்கு சென்று விட்டது.

பல இடங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்படலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளதால், தமிழக அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.