‘மகாமுனி’ படத்துக்காக சர்வதேச விருதுகளை வென்ற மகிமா நம்பியார்….!

Must read

கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘மகாமுனி’ விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு, சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வென்று வருகிறது.

அண்மையில் ஸ்பெயினில் நடைபெற்ற மேட்ரிட் சர்வதேச திரைப்பட விழாவில், மகாமுனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை மகிமா நம்பியாருக்கு, சிறந்த துணை நடிகைக்கான விருது கிடைத்தது.

இந்நிலையில் டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில், அவருக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் இந்த திரைப்பட விழாவில், சிறந்த படத்துக்கான விருதையும் மகாமுனி திரைப்படம் வென்றுள்ளது. அடுத்தடுத்து 2 சர்வதேச விருது வென்றுள்ள நடிகை மகிமா நம்பியாருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

 

More articles

Latest article