சென்னை: நடிகரும், தவெக தலைவருமான  விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு விசாரணையை செங்கல்பட்டு நீதிமன்றம் ஜூன் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. அன்றைய தினம்  இருவரும் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

த.வெ.க தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான மனக்கசப்பு தற்போது  விவாகரத்து  வரை சென்றுள்ளது. 2026ம் ஆண்டு,  பிப்ரவரி 24-ஆம் தேதி  சங்கீதா தரப்பில்,  செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில் நடிகர் விஜய் மீது சில முக்கியக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதில், நடிகர் விஜய் ஒரு நடிகையுடன் தொடர்பில் இருந்ததாகவும், அதன் காரணமாகத் தான் ஏமாற்றப்பட்டதாக உணர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, 2021-ஆம் ஆண்டு முதல் இருவரும் ஒரே வீட்டில் வசித்தாலும் தனித்தனியாகவே வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுமீதான விசாரணையைத் தொடர்ந்து, , நடிகர் விஜய் இன்று (ஏப்ரல் 20)  நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், தற்போது தேர்தல் இறுதிகட்ட பிரசாரம்  நேரம் என்பதால், விஜய் தரப்பில்,காணொளி காட்சி வாயிலாக ஆஜராக அனுமதி கோரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அடுத்தகட்ட விசாரணையை வரும் ஜூன் மாதம் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். அன்றைய தினம் நடிகர் விஜய் மற்றும் சங்கீதா ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]