விருதுநகர்: விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. இதுபோன்ற விபத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்போது என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டி அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. வெடி விபத்தின் தாக்கத்தால் சிலரது உடல் உயரே பறந்து வந்து விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்து போனதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் மேலும் பலர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், விபத்தினால் ஆலை வளாகத்தில் இருந்த 4 அறைகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. இந்த வெடி விபத்தின் சத்தம் மற்றும் அதிர்வு சுமார் 10 கிலோமீட்டர் தூரம் வரை உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் அதிக வெடிகளை தயாரிக்க முயன்றதே வெடி விபத்துக்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், விபத்து நடந்த ஆலையின் உரிமையாளர் முத்துமாணிக்கம் தலைமறைவானதாக கூறப்படுகிறது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
[youtube-feed feed=1]