சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை வீட்டில் IT Raid நடைபெற்று வருகிறது. இதை கடுமையாக கண்டித்துள்ளவர், தேர்தல் பிரசாரத்துக்கு செல்ல விடாமல் தக்கை சிறைபிடித்துள்ளதாக குமுறி உள்ளார்.
சென்னையின் பல இடங்களிலும் இன்று ஐடி ரெய்டு நடைபெற்று வருகிறது. இது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மணிமங்கலத்தில் உள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள செல்வப்பெருந்தகை வீட்டிலும் வருமான வரித்துறையினர் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொகுதியில், வாக்காளர்களுக்கு விநியோகிக்க செல்வப்பெருந்தகை வீட்டில் பணம் பதுக்கப்பட்டுள்ளதாக புகார் வந்த நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
மேலும்,‘சென்னை வேப்பேரி ஓசோன் 1 என்ற சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் தொழிலதிபர் வீட்டு உள்பட மேலும் பல பகுதிகளிலும் ஐடி சோதனை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, பிரசாரத்துக்கு செல்ல விடாமல் இந்தி பேசும் வருமான வரித்துறையினர் தன்னை சிறைப்பிடித்துள்ளதாக செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். ராகுல்காந்தி தென்மாவட்டங்களில் இன்று பிரசாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், செல்வபெருந்தகை வீட்டில் ரெய்டு நடைபெறுவது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதன் மூலம் நான் எனது அரசியல் கடமைகளை ஆற்றுவதையும், மக்களைச் சந்திப்பதையும் அவர்கள் தடுத்துள்ளனர் என செல்வபெருந்தகை குற்றம் சாட்டி உள்ளார். அரசியல் ரீதியாக மிக முக்கியமான தருணத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் திட்டமிட்ட நடவடிக்கை, ஜனநாயக செயல்பாடுகளைத் தடுப்பதற்கும், எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை முடக்குவதற்குமான ஒரு முயற்சியாகும். இந்த சோதனையின் பின்னணியில் உள்ள நேரம், அதன் உண்மையான நோக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது – இது சட்ட அமலாக்கம் அல்ல, மாறாக அச்சுறுத்தல் ஆகும்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே அச்ச உணர்வை உருவாக்கவும், கருத்து வேறுபாடுகளை ஒடுக்கவும், அரசியல் பங்களிப்பைக் கட்டுப்படுத்தவும் மத்திய அரசு, முகமைகளை அரசியல் அழுத்தக் கருவிகளாகப் பயன்படுத்தும் ஒரு கவலையளிக்கும் போக்கை இது பிரதிபலிக்கிறது.
டெல்லிக்கு ரிப்போர்ட் அதிகாரத்தைத் தன்னிச்சையாகத் தவறாகப் பயன்படுத்துவது என்பது ஜனநாயகத்தின் அடிப்படைத் தத்துவங்கள் மீதான தாக்குதலாகும். சுதந்திரமான நடமாட்டம், பேச்சுரிமை மற்றும் நேர்மையான அரசியல் ஈடுபாடு ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு ஜனநாயகத்தில், சட்டத்தைக் காக்க வேண்டிய நிறுவனங்கள் அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்தப்படும்போது, அது பொதுமக்களின் நம்பிக்கையைச் சிதைத்து நமது ஜனநாயக அமைப்பின் நேர்மையைச் சீரழிக்கிறது. அரசியல் உள்நோக்கம் கொண்ட இந்த நடவடிக்கையை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
ஜனநாயகக் குரல்களை ஒடுக்கும் இதுபோன்ற முயற்சிகளுக்கு எதிராக உறுதியுடன் நிற்பேன் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறேன். எந்தவிதமான அச்சுறுத்தலும் மக்களுக்குச் சேவை செய்யும் எங்களது கடமையிலிருந்தும், நீதி, நேர்மை மற்றும் ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்துவதிலிருந்தும் எங்களைப் பின்வாங்கச் செய்ய முடியாது.”
இவ்வாறு கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]