சென்னை: தவெக  தலைவர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது,. செங்கல்பட்டு குடும்பல நல நீதி மன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது. இதில் சம்பந்தப்பட்ட இருவரும் ஆஜராவார்களா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

விஜய்யிடம் விவகாரத்து கோரி மனைவி சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து வழக்கு இன்று செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. ஆனால் இன்று விஜய் சென்னையில் பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதால் வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராகுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி 234 தொகுதிகளில் தனித்து  போட்டியிடுகிறது விஜய் கட்சி. இவருக்கும்,  அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே  கடந்த சில ஆண்டுகளாக மனக்கசப்பு ஏற்பட்டது. இதையடுத்து, நடிகர் விஜய்யிடம் இருந்து விவகாரத்து கோரி மனைவி சங்கீதா செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி சங்கீதா மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுமீதான  விசாரணை செங்கல்பட்டு நீதிமன்றம்   ஏப்ரல் 20 (இன்று) விசாரணைக்கு வருகிறது. இன்றைய தினம் விஜய் நேரில் ஆஜராக ஏற்கனவே  நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.  ஆனால், விஜய் பிரசார பயணத்தில் தீவிரம் காட்டி வருவதால், இன்று விசாரணைக்கு ஆஜராவது கேள்விக்குறியாகி உள்ளது.

 இதற்கிடையே, தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் பணிகள் தீவிரமாக இருப்பதாலும், விஜய் தனது கட்சி சார்பில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாலும், நேரில் ஆஜராக முடியாத சூழல் உள்ளது. எனவே, ஆன்லைன் வாயிலாக விசாரணையில் பங்கேற்க அனுமதி கோரி விஜய் தரப்பில் கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை நீதிமன்றம் ஏற்குமா? என்பது தெரியவில்லை.

விஜய்யை பொறுத்தவரை விவகாரத்து வழக்கு அவரது தனிப்பட்ட விவகாரம் என்றாலும் தேர்தல் நேரத்தில் இது அவருக்கு பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளது

[youtube-feed feed=1]