சென்னை: தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் பரப்புரை நாளை மாலையுடன் ஓய்வடைய உள்ள நிலையில், இன்று சென்னையில் முதல்வர் ஸ்டாலின் சூறாவளி பிரசாரம் மேற்கொள்கிறார். மேலும், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எங்கு பரப்புரையில் ஈடுபடுகின்றனர் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரும் 23ந்தேதி நடைபெற உள்ளது. இதன் காரணமாக சூறாவளி பிரசாரம் நடைபெற்று வருகிறது. நாளை மாலை 6மணியுடன் பிரசாரம் ஓய்வடைகிறது.
இந்த சூழலில், ஒவ்வொரு கட்சியினரும், கட்சி தலைவர்களும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் சாலைவலம் வருகிறார்.
அதுபோல பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலையும் இன்று சென்னையில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார்.
திமுக கூட்டணி கட்சியைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் இன்று சென்னையில் பரப்புரையில் ஈடுபடுகிறார்.
எதிர்க்கட்சி தலைவரான முன்னாள் முதல்வர் மற்றும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார்.
திமுக கூட்டணி கட்சியைச் சேர்ந்த மதிமுக பொதுச்செயலாளரும், திமுக கூட்டணிக்கட்சித் தலைவருமான வைகோ கடையநல்லூரில் பரப்புரையில் ஈடுபடுகிறார்.
திமுக கூட்டணி கட்சியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளரான சண்முகம் செய்யூர் மற்றும் மதுராந்தகத்தில் பரப்புரை செய்கிறார்.
அதிமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள அமமுக பொதுச்செயலாளர் தினகரன் இன்று திருப்பரங்குன்றம், திருமங்கலம், சாத்தூர், ராஜபாளை யம் மற்றும் வாசுதேவநல்லூர் ஆகிய பகுதிகளில் பரப்புரையில் ஈடுபடுகிறார்.
அதிமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள பாமக தலைவரான அன்புமணி ராமதாஸ் இன்று மேட்டூர், எடப்பாடி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சங்ககிரியில் பரப்புரையில் ஈடுபடுகிறார்.
தவெக தலைவர் விஜய் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்துள்ள பஞ்சட்டி, சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் பரப்பரையில் ஈடுபடுகிறார்.
திமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள கமல்ஹாசன் திருவெறும்பூர், லால்குடி, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் பரப்புரை செய்கிறார்.
அதிமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள தமாக தலைவர் ஜிகே வாசன் குன்னம், அரியலூர் மற்றும் ஒரத்தநாட்டில் பரப்புரையில் ஈடுபடுகிறார்.
பாஜக-வின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் வாசுதேவநல்லூர் மற்றும் ராஜபாளையத்தில் பரப்புரை செய்கிறார்.
ராகுல் காந்தி:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி இன்று கன்னியாகுமரி, நாங்குநேரி மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஆகிய பகுதிகளில் பரப்புரையில் ஈடுபடுகிறார்.
[youtube-feed feed=1]