சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, சென்னையின் வளர்ச்சிக்கான 6 முக்கிய வாக்குறுதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.

முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில், 4வது முறையாக மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, திமுக முன்னாள் மாவட்ட செயலாளர், வி.எஸ். பா தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் பு போட்டியிடுகின்றார். மேலும், அதிமுக சார்பில் சந்தானகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், சென்னையை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்றும் நோக்கில் ‘சென்னை சூப்பர்-6’ திட்டங்களை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-
திமுகழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று (19.04.2026), காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் “சென்னை சூப்பர்-6” எனும் திராவிட மாடல் 2.O வாக்குறுதிகளை வெளியிட, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பெற்றுக் கொண்டார்.
அதில் சென்னைக்கான மேம்படுத்தப்பட்ட பொதுவசதிகள், சென்னை முழுவதும் சிறப்பான போக்குவரத்து, திட்டமிட்ட கால அளவில் உட்கட்டமைப்புத் திட்டங்கள், மனிதாபிமானம்-அறிவியல் முறையில் கைவிடப்பட்ட நாய்களின் பிரச்சினைக்குத் தீர்வு, உலகளாவிய சிறப்பு மையம், உலகளாவிய திறமைத் தளம் (Global Talen Gateway) ஆகிய தலைமைப்புகளிலான “திராவிட மாடல் 2.O வாக்குறுதி”களை வெளியிட்டார்.
முழு விவரம் பின்வருமாறு,

[youtube-feed feed=1]