தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் ஏராளமான நலத்திட்ட உதவிகள்! முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்…

Must read

சென்னை: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் ஏராளமான நலத்திட்ட உதவிகளை  முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் ரூ.699.26 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் வங்கி கடன்கள் போன்றவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மேலும், புழக்கடைக் கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் 3936 நிலமற்ற மற்றும் ஏழை மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.3.53 கோடி நிதியுதவிகளையும்  வழங்கினார்.

தொடர்ந்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.1597.59 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

More articles

Latest article