மதுரை: விஜயகாந்த் மறைவால்  அவரது  மதுரை மேலமாசி வீதி பூர்வீக வீடு சோகமயமாக காட்சி அளிக்கிறது. அவரது  சகோதரர் உள்பமட குடும்பத்தினர் கண்ணீர் மல்க காணப்படுகின்றனர்.

உடல்நலக்குறைவால்  கடந்த சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் ( (வயது 71),  கடந்த 10 நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு  மீண்டும் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரக்கு  விஜயகாந்த்கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்த நிலையில்,  விஜயகாந்த் இன்று அதிகாலை உயிரிழந்தார்.  நுரையீரல் அழற்சி காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவரது உடல்  விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.  விஜயகாந்தின் மரணச் செய்தியை அறிந்த தேமுதிக தொண்டர்களும் அவரின் ரசிகர்களும் கண்ணீர் கடலில் மூழ்கியுள்ளனர். மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், விஜயகாந்தின் சொந்த ஊரான மதுரையிலும் சோகமான சூழலே காணப்படுகிறது.  மதுரை மேலமாசி வீதியில் உள்ள விஜயகாந்தின் பூர்வீக வீடு சோகமயமாக காட்சி அளிக்கிறத. விஜயகாந்தின் மறைவுச் செய்தி கேட்டு அவரின் உடன் பிறந்த கோதரர் செல்வராஜ் மற்றும் மனைவி மீனாட்சி ஆழ்ந்த சோகத்துடன் உள்ளனர். மேலும் அவரது உறவினர்களும் சோகமயமாக உள்ளனர்.