சென்னை : தமிழ்நாட்டில் இதுவரை 8 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 582 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என தமிழ்நாடுஅரசு தெரிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் இயற்கை பேரிடரால் ஏற்படும்  பயிர்ச் சேதங்களுக்கு மொத்தம் 582 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டு 8 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளதாக தமிழக அரசு தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சீர்மிகு திட்டங்களால் தமிழ்நாடு வேளாண்மைத்துறையில் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது என்றும் ரூ.651 கோடியில் கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி, ரூ.4,366 கோடி பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை! ரூ.651 கோடியில் கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை! ரூ.614 கோடியில் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்! ரூ.270 கோடி ரூபாயில் விவசாய இயந்திரங்கள்!

ரூ.56 கோடியில் முதல் முறையாக ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியம்! ரூ.137 கோடியில் குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டம்! ரூ.139 கோடியில் பயறு பெருக்கத் திட்டம் உள்பட  தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் சீர்மிகு திட்டங்களால் இந்தியாவிலேயே தமிழ்நாடு வேளாண்மைத் துறையில் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.