சென்னை: கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.  ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 880 குறைந்து ரூ. 54,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதாவது, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.110 குறைந்து, ஒரு கிராம் ரூ.6,750க்கு விற்பனையாகிறது.  மொத்தத்தில்  சவரனுக்கு ரூ.880 குறைந்து, ஒரு சவரன் ரூ.54,000க்கு விற்பனையாகிறது.

இந்திய மக்களிடையே., குறிப்பாக தமிழ்நாடு உள்பட தென் மாவட்ட மக்களிடையே தங்கத்திற்கு தனி மரியாதை உண்டு.  பல நூற்றாண்டுகளாக,  இந்திய  பெண்களின் வளர்ச்சியில் தங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. தங்க அணிகலன்கள் அணிவது மூலம் சமூதாயத்தில் தங்களை உயர்ந்தவர்களாகவும் பெண் காட்டிக்கொள்கின்றனர்.  தங்க நகைகள் மீதான பெண்களின் அதீத ஆசை காரணமாகவும், உலகம் முழுவதும் சேமிப்புக்காகவும் தங்கம் அதிக அளவில் விற்பனையாகிறது.  அதன் விலைகளும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

2024 தொடக்கம் முதலே தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. 2024 பிப்ரவரி மாத இறுதியில், கிராம் தங்கம் விலை ரூ. 5,815 ரூபாய் ஆக இருந்த நிலையில்,  தொடர்ந்து தங்கத்தின் விலை சிறுக சிறுக உயர்ந்து வருகிறது. புதிய உச்சமாக  மார்ச் 27-ம் தேதி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 50 ஆயிரம் ரூபாயை எட்டியது.  மேலும் குறுகிய கால இடைவெளியில் கிடுகிடுவென தங்கத்தின் விலை அதிகரித்து விலை ரூ.55 ஆயிரத்தை தாண்டியது. இதனால் பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில்,  இன்று தங்கத்தின்  விலை அதிரடியாக குறைந்துள்ளது. நேற்றுமுன் தினம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.54,880க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.6,860க்கு விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து, நேற்று தங்கத்தின் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று  சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் இன்று ரூ. 110 குறைந்து ரூ. 6750 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 54,880 விற்பனையான நிலையில் சவரனுக்கு ரூ. 880 குறைந்து ரூ. 54,000விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளி ரூ. 100.30 க்கு விற்பனையான நிலையில் கிராமுக்கு ரூ. 3.30 குறைந்து ரூ. 97 க்கு விற்பனை செய்யப்படுகிறது.