தளபதி67 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது.

7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தின் முக்கிய தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரத்தை வெளியிட்டுள்ளது.

இந்தப் படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் எஸ்.எஸ். லலித் குமார் தயாரிக்க அவருடன் விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷ் பழனிசாமி இணை-தயாரிப்பு செய்கிறார்.

மாஸ்டர் திரைப்படத்திற்குப் பிறகு விஜயை இயக்க இருக்கும் லோகேஷ் கனகராஜ் தனது தளபதி67 படத்திற்கு அனிருத்தை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளார்.

அனிருத் இதற்கு முன் விஜய் நடித்த கத்தி, மாஸ்டர் மற்றும் பீஸ்ட் ஆகிய படங்களுக்கு இசையமைத்திருந்தார்.

தளபதி67 படத்தின் மற்ற நடிகர் நடிகை குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.