பிரபல நடிகர் ‘தலைவாசல்’ விஜய் மகள் ஜெயவீனாவுக்கும் தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான பாபா அபராஜிதுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.

பாபா அபராஜித் உடன் சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்ததை அடுத்து அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் ஜெயவீனா.

ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் தமிழக அணிக்காகவும், 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பைப் போட்டியில் இந்திய அணிக்காகவும் விளையாடியுள்ளார் பாபா அபராஜித்.

1992 ம் ஆண்டு தலைவாசல் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்த விஜய், தேவர் மகன், அமராவதி, சண்டக்கோழி உள்ளிட்ட ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர்.

தலைவாசல் விஜயின் மூத்த மகள் ஜெயவீனா, நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்டு பல பதக்கங்களை பெற்றுள்ள நிலையில், சமீபத்தில் நேபாளத்தில் நடைபெற்ற, 13-வது தெற்காசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

ஜெயவீனா – பாபா அபராஜித் திருமணம் விரைவில் நடைபெற இருப்பதாகவும் இதுகுறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.