“ஏர்செல்- மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்குல  முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விசாரிக்கப்படுவார்”னு  உச்சநீதிமன்றத்தில் தெரிவிச்சிருந்த நிலையில,  இப்போ முழுசும்  17 இடங்கள்ல ப.சிதம்பரம், அவர் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமான இடங்கள்ல சிபிஐ அதிரடி சோதனை நடத்தி வருது.

சி.பி.ஐ. ரெய்டு நடக்கப்போறது, கார்த்திக் சிதம்பரத்துக்கு  முன் கூட்டியே  தெரிமோன்னு சிலபேரு  பேச ஆரம்பிச்சிருக்காங்க.

கார்த்தி

இதுக்குக் காரணமா அவங்க சொல்றது கார்த்தியோட ட்விட்டர் பதிவுங்கதான்.

இந்த ரெய்டு நடக்கிறதுக்கு முன்னால தன்னோட ட்விட்டர் பக்கத்துல, ராஜஸ்தான் ஆம்புலன்ஸ் ஊழல் வழக்குல குற்றம்சாட்டப்பட்டவங்க  நியாயம் கேட்டு  பிரதமரை அணுகுற  செய்தியையும் பதிஞ்சிருக்காரு.

இந்த செய்திக்கு தன்னோட பதிலா,  “அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வர்த்தகர்கள் மற்றும் தொழில் புரிவோர் பாதிக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானது” அப்படின்னு ட்விட்டியிருக்காரு கார்த்தி.

இதைவச்சுத்தான் தன்னை மையமா வச்சு, சி.பி.ஐ. ரெய்டு நடக்கும்னு கார்த்தி யூகிச்சாரோன்னு சிலபேரு சொல்ல ஆரம்பிச்சிருக்காங்க.

“அடப்போங்கப்பா… ஏற்கெனவே அவரு அலுவலகத்துல ரெய்டு நடந்துச்சே… அதனால அப்படி ட்விட்டியிருப்பாரு. இதைப்போயி பெருசா எடுத்துக்கிட்டு” அப்படின்னு அவருக்கு நெருக்கமானவங்க சொல்றாங்க.

கார்த்தியும், , “ எதுக்காக இந்த சி.பி.ஐ. ரெய்டுன்னு எனக்கே தெரியலே”னு  அப்புரானியா சொல்லிருக்காரு, பாவம்!