‘ரான்சம்வர்’ சைபர் தாக்குதலில் இருந்து தப்பிப்பது எப்படி?

Must read

சென்னை,

லக நாடுகளை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ரான்சம்வர் சைபர் தாக்குதலில் இருந்து நமது கணிணிகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாய நிலையில்  இருக்கிறோம்.

இன்று கையடக்க செல்பேசி முதல் அனைத்து வகையான எலக்ட்ரானிக் உபயோக முறைகளிலும் இணையத்தின் இணைப்பு இன்றியமையாததாகி உள்ளது.

தற்போது ஜியோ போன்ற தொலை தொடர்பு  நிறுவனங்களின் அதிரடி சலுகை காரணமாக பட்டிதொட்டி முதல் பிரபல நிறுவனங்கள் வரை இணையம் உபயோகம் இல்லாதவர்களே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை.

இந்தியாவில் மோடி ஆட்சிக்கு வந்தபிறகு டிஜிட்டில் இந்தியா திட்டத்தின்மூலம் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும்  இணையத்தின்மூலமே செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது உலக நாடுகள் முழுவதும் சைபர் கிரைம்வாதிகளால்  ரான்சம்வர் சைபர் தாக்குதல் நடைபெற்றுள்ளது உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

சுமார் 150 நாடுகளில் உள்ள அரசு கணிணினிகள் இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவிலும்   தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுபோன்ற வைரஸ் தாக்குதலில் இருந்து நமது கணினிகளை பாதுகாக்க விழிப்புணர்வு தேவை என்று மைக்ரோ சாப்ட் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் நேற்று காலை அலுவலகம் வந்த இந்திய தொழில்நுட்ப ஊழியர்களுக்கு ரான்சம்வர் தாக்குதல் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

சென்னையில் ஓஎம்ஆர் சாலையில் உள்ள  ஐடி கம்பெனிகள் முதல் டிஎல்ப் சிட்டியில் உள்ள ஐடி கம்பெனிகள் வரை பெரும்பாலான நிறுவனங்கள் ரான்ராம்வர் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளது தெரிய வந்துள்ளது.

இதுபோன்ற  இணைய தாக்குதல்கள் பல்வேறு தடவை நடந்திருந்தாலும், தற்போது நடைபெற்றுள்ள ரான்சம்வர் இணைய தாக்குதல் உலக நாடுகள் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக அரசு நிறுவனங்களையே பெருமளவில் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளன.

இந்தியாவில் 180-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்  ரான்சம்வேர் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.  இந்த ரான்சம்வேர் வைரஸ் வகைகளில் இந்த ஆண்டு மட்டும் 79 வகை வைரஸ்கள் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுபோன்ற வைரஸ்கள் பெரும்பாலும் இமெயில் மூலமாகவே பதவிறக்கம் செய்யப்பட்டு, கணிணி ஹாக் செய்யப்படுகிறது. சுமார் 58 சதவிகித தாக்குதல் இமெயில் மூலமாக நடைபெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது.‘

இவற்றில் 58 சதவீத தாக்குதல்கள் மின்னஞ்சல்கள் (இ-மெயில்) மூலமாகவே நடந்திருக்கின்றன.

தாக்குதலால் ஏற்படும் பிரச்சினை என்ன?

ரான்சம்வர் குறித்து தொழில்நுட்ப நிபுணர் ஒருவர் கூறியதாவது,

கணினியில்  வைரஸ் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். கணினியில் உள்ள டேட்டாக்களை அழித்து, ஓஸ் எனப்படும் கணினி இயக்க பயன்படும் மைக்ரோசாப்ட் இயக்கத்தையும் தடை செய்துவிடும்.

இதில் பல வகை வைரஸ்கள் உள்ளன.  மால்வேர். ஸ்பைவேர், வார்ம்ஸ், ட்ரோஜன் வைரஸ், ரான்சம்வேர், ஆர்டில் எனப் பலவகைகள் உண்டு. இதுபோன்ற வைரஸ்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான தொல்லைகளை கொடுக்கும்.

இதுபோன்ற வைரஸ்கள் மூலம் ஹேக்கர்கள் எனப்படும் சைபர் கிரிமினல்கள் நமது கணினின் டேட்டாவை திருடிவிட முயற்சிக்கிகாறர்கள். இதுபோன்ற ஒரு வைரஸ்தான் தற்போது பிரபலமாகி வரும் ரான்சம்வர் என்ற வைரஸ் தாக்குதல்.

இந்த ரான்சம்வர் வைரஸ் மற்ற சாதார வைரஸ்களில் இருந்து இது முற்றிலும் வேறுபட்டது.  மற்ற வகையான ஹேக்கிங் முறைகளை விட இந்த ரான்சம்வர் மூலம் ஹேக்கிங் செய்ய மிகவும் எளிதானது என்றும் கூறப்படுகிறது.

இநத் ரான்சம்வர் வைரஸ் சாப்ட்வேர் மூலம் நமது  கணினியை சைபர் கிரிமினல்கள்  ஹேக் செய்து, நாம் ஏற்கனவே உபயோகப்படுத்தி வரும் நெட் பேங்கிங்  போன்ற சேவைகைளை எளிதாக பயன்படுத்தி, நமது வங்கி சேவைகைள அவர்கள் உபயோகப்படுத்தி, அவர்களுக்கு தேவையான பணத்தை நமது வங்கி கணக்கில் இருந்து அவர்களுடைய வங்கிகளுக்கு மாற்றிக்கொள்ள முடியும்.

மற்ற வைரஸ்களில் இதுபோன்ற வங்கி சேவை மற்றும் அரசு சேவைகளை பயன்படுத்த சற்று கடினம். ஆனால், இந்த ரான்சம்வேர் வைரஸ் குறிப்பாக வங்கி சேவைகளை மற்றும் அரசு ஆவணங்களை திருடவே பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது  ஆபத்து நிறைந்த இந்த ரான்சம்வர்.

இந்த வைரஸ் சாப்ட்வர் முதலில் உங்களுக்கு ஒரு மெயிலை அனுப்பும். அதை நீங்கள் திறந்துவிட்டாலே, அது தன் வேலையை காட்டிவிடும். அதன்பிறகு நமது கணினி நமக்கு கிடையாது. ஹேக்கர்கள் நம்முடைய கணினியை அவர்களது கண்ட்ரோலில் கொண்டு சென்றுவிடுவர். பின்னர் நம்மை தொடர்புகொண்டு உங்கள் கணினியை பழைய நிலைக்கு மாற்றவோ, உங்கள் கணினியில் உள்ள தகவல்களை திருட்டு போகாமல் இருக்கவோ கணிசமான அளவு பணம் அனுப்புங்கள் என்று நமக்கு தகவல் கொடுப்பார்கள்.  அதற்கும் காலக்கெடு கொடுப்பார்கள்,

நமக்கு மடியில் கனமில்லை என்றால் நாம்  நாம் அதை கண்டுகொள்ள தேவையில்லை. ஆனால், நாம் ஏற்கனவே வங்கி சேவை போன்ற இணையவழி சேவைகளை பயன்படுத்தி இருந்தால், நமது  ரகசியங்கள் திருடு போகாமல் தடுக்க அவர்களின் மிரட்டலுக்கு பணிய வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

இதுதான் பிரச்சினை….  முகம் தெரியாத ஹேக்கர்களுக்கு தேவை பணம்… அதற்காக அவர்கள் எந்த நிலைக்கும் செல்கிறார்கள்….

இந்த  ரான்சம்வேர் வைரஸ் உங்கள் ஸ்மார்ட்ஃபோன், டேப்லட், கணினிகள் என எதனை வேண்டுமானாலும் தாக்க முடியும் என்பதுதான் வேதனைக்குறியது.

உலக நாடுகளிடையே அதிகமாக வைரஸ் தாக்குதல் நடைபெறும் நாடுகளில் முதல் பத்து இடத்தில் இந்தியாவும் உள்ளது என்பதும், தற்போது நடைபெற்றுள்ள ரான்சம்வர் தாக்குதலில் இந்தியாவும் அதிகளவு பாதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்க்கது.

இந்த தாக்குதலில் இருந்து தப்பிப்பது எப்படி?

இந்த ரான்சம்வர் வைரஸ் இமெயில் மூலமாகவே பெரும்பாலும் நடைபெற்று வருகிறது. ஆகவே, இணையம் உபயோகப்படுத்துபவர்கள் தங்களுக்கு வரும் தெரியாத  (unknown) மெயில்களை திறக்காமல் இருப்பது அவசியம்.

ஆன்லைன் ரம்பி, ஆன்லைன் லாட்டரி, உங்கள் மொபைல் எண் தேர்வு செய்யப்பட்டுள்ளது… இவ்வளவு பரிசு என்று ஆசை வார்த்தை கூறி வரும் மெயில்களை ஆசையோடு திறந்தால் அதோ கதிதான்…. எச்சரிக்கை

உங்கள் கணினியில் உடனே நல்ல ஆன்டி வைரஸ் சாப்ட்வேர்களை லோடு செய்து, கணினியை செக்யூராக வைத்திருக்க முன்வாருங்கள்.

புதிய பென்-டிரைவ் அல்லது மொபைல் போன்களை கம்ப்யூட்டருடன் இணைக்கும்போது  ஆன்டி வைரஸ் சாப்ட்வேர் மூலம்  ஸ்கேன் செய்த பின்பே உபயோகப்படுத்துங்கள்.

தேவையற்ற வலைதளங்களுக்கு செல்வதை தவிருங்கள்.  அதேபோல் தேவையற்ற இலவச மென்பொருள்களை இன்ஸ்டால் செய்வதை கண்டிப்பாக தவிருங்கள்.

வங்கி மற்றும் இணையவழி சேவைகளை உடனே   பேக்-அப் எடுத்து தனியாக சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். முடிந்தால் ஒருசில நாட்கள் வங்கிகளின் ஆன்லைன்  சேவைகளை தவிருங்கள்.

அதுபோலவே, மொபைல் போனிலும் தேவையற்ற Appகளை  பதிவேற்றம் செய்வதை தவிருங்கள்.

முகநூல் போனற் சமுக வலைதள கணக்குகளை பிறருக்கு பகிர்வதை தவிர்க்க முயலுங்கள்.

கணினி உபயோகப்படுத்தி முடிந்ததும் உடனே ஆப் செய்து வையுங்கள்.

உங்கள் கணினி ரான்சம்வேர் தாக்கியிருப்பது தெரியவந்தால் உடனடியாக இணைய இணைப்பை ரத்து செய்யுங்கள்…

நீங்கள் உஷாராக இருந்தால்…. உங்கள் கணினியும் உஷாராக செயல்படும்… எச்சரிக்கை…. 

More articles

Latest article