சென்னை: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரண வழக்கில் விசாரணை நிறைவு பெற்றுவிட்டதாகவும், 4 வாரங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறை தெரிவித்து உள்ளது.

கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மாடியில் இருந்து விழுந்து மரணமடைந்தார். அவரது மரணம் கொலையா, தற்கொலையா என சந்தேகிக்கப்பட்டது. இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் 3 நாளாக நடைபெற்று வந்த நிலையில், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காதால், வன்முறைகளமாக மாறியது. சில சமூக விரோதிகள் பொதுமக்களுடன் புகுந்து, பள்ளி பேருந்துகளுக்கு தீ வைத்த எரித்ததுடன், பள்ளி கட்டிங்கள், ஆவனங்களையும் நாசப்படுத்தினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த வன்முறை தொடர்பான வழக்கு விசாரணையை முறையாக நடத்த கோரி மாணவியின் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு கடந்த முறை நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது. மாணவி பயன்படுத்திய செல்போனை பலமுறை சம்மன் அனுப்பி கேட்டும் வழங்கவில்லை என காவல்துறை தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. அதற்கு நீதிபதிகள் உடனடியாக செல் போனை வழங்க வேண்டும் என்றும், இல்லையெனில் பெற்றோர்களிடம் விசாரணை நடத்த உத்தரவிட நேரிடும் என்றும் எச்சரித்திருந்தன.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஸ்ரீமதியின் பெற்றோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கர் சுப்பு, மாணவி பயன்படுத்திய செல் போன் ஜனவரி 20-ம் தேதி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார். மேலும் ஜிப்மர் மருத்துவக்குழு நடத்திய பிரேத பரிசோதனை அறிக்கை தங்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் கூறினார். இதனையடுத்து விசாரணையின் தற்போதைய நிலைகுறித்து நீதிபதி கேள்வியெழுப்பியனார். அப்போது விசாரணையின் நிலை குறித்த அறிக்கையை சீலிடப்பட்ட உரையில் அரசு தரப்பு வழக்கறிஞர் சந்தோஷ் தாக்கல் செய்தார். மேலும் மாணவி பயன்படுத்திய செல்போன் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதன் அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்ததுடன்,  மற்ற விசாரணை நிறைவடைந்துவிட்டது என்றவர் தடயவியல் அறிக்கை கிடைத்தவுடன் ஒருமாதத்தில் விசாரணை நீதிமன்றத்தில் இந்த வழக்கின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும்  தெரிவித்தார்.

இதனையடுத்து ஜிம்மர் மருத்துவக்குழுவின் பிரேதபரிசோதனை அறிக்கையை வழங்கக்கோரி விசாரணை நீதிமன்றத்தை அணுகுமாறு மனுதாரர் ராமலிங்கத்திற்கு உத்தர விட்ட நீதிபதி, இந்த வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்தார்.