சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில்  ஓபிஎஸ் தரப்பு வேட்பாளராக  செந்தில்முருகன் அறிவிக்கப்பட்டு உள்ளார். இதற்கான அறிவிப்பை ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டு உள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசுவை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை அறிவித்தார். இதையடுத்து,  தமது தரப்பில் போட்டியிடும் வேட்பாளரை இன்று மாலை 5 மணிக்கு அறிவிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

இந்த நிலையில், இன்று மாலை 5மணி அளவில், சென்னை பசுமை வழிசாலையில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்கள் சந்தித்த ஓபிஎஸ், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் தங்கள் அணி  சார்பாக செந்தில்முருகன் போட்டியிடுவார் என அறிவித்துள்ளார். தொடர்ந்து பேசியவர்,  செந்தில்முருகனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும், பாஜக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டால் எங்களது வேட்பாளரை வாபஸ் பெறுவோம் எனவும் கூறியுள்ளார்.

மேலும், இந்திய தேர்தல் ஆணைய ஆவணப்படி, இன்று வரை அதிமுக ஒருங்கிணைப்பாளராக நான் இருக்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.