சென்னை: மதுரையில் கலைஞர் நூலகம் உள்பட பல்வேறு கேள்விகளை  சட்டபேரவையில் எழுப்பிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுக்கு முதல்வர் ஸ்டாலின் உடனடியாக பதில் தெரிவித்தார். இது தொடர்பாக  காரசார விவாதம் நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் தற்போது மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று  கூட்டுறவுத் துறை மற்றும் உணவு துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய,  மதுரையில் கலைஞர் நூலகம் அமைப்பது தொடர்பாக மதுரை (மேற்கு)தொகுதி உறுப்பினர்  செல்லூர் கே. ராஜு  மற்றும் முதல்வர் ஸ்டாலின் இடையே காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன.

அவையில் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜி, பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் அறிவிக்கப்பட்ட நிலையில்,  வயதானவர்கள் பேருந்தில் ஏறியபின், அது  கட்டண பேருந்தாக இருந்தால் இறக்கிவிடப்படுகின்றனனர். அதனால் அவர்களுக்கும் இலவச பேருந்து செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

தொடர்ந்து,  மதுரையில் உள்ள பென்னி குவிக் இல்லத்தை மாற்றி, கலைஞர் பெயரில் நூலகம் அமைக்க உள்ளதாக தகவல் வருவதாகக் கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அந்த இல்லம் பென்னி குவிக் இல்லம் இல்லை என்றும், தவறான கருத்தை பதிவு செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார். , பென்னி குவிக் இல்லத்தை இடித்துவிட்டு கருணாநிதி நூலகத்தை கட்டப்படவில்லை என்றும் ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள், நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என கூறினார்.

தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்ற நிலையில்,  நீங்கள் சொல்வதற்கு ஆதாரங்கள் இருந்தால், இந்த அரசு அடிபணிய காத்திருக்கிறது என்றும் எந்தவித ஆதாரமும் கிடையாது, ஒரு தவறான பிரச்சாரத்தை செய்து வருகிறார்கள் என முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

பென்னிகுவிக் இல்லத்தை இடித்துவிட்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி நூலகம் அமைக்கப்படுகிறது என்று செல்லூர் ராஜு போன்ற மூத்த உறுப்பினர் தவறான தகவலை அவையில் கூறக்கூடாது என்று கூறியதுடன், மூன்றாவது முறையாக சட்டமன்றத்துக்கு வந்துள்ளீர்கள். இதுபோன்று சொல்வது உங்களது திறன் தன்மையை குறைப்பதாக உள்ளது என தெரிவித்தார்.

மேலும், இந்த விஷயத்தில்  பென்னிக்குவிக் அங்கு தங்கியதற்கான ஆதாரம் இருந்தால்,  இடத்தை மாற்ற அரசு தயாராக உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.