சென்னை: தனது தாயாரும், அதிமுக வேட்பாளருமான லீமா ரோஸ் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி லட்சிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் சென்னை தலைமை செயலகத்தில் தேர்தல் ஆணையரிடம் புகார்  அளித்தார்.

தனது குடும்பத்தைக் குறிவைத்து அவதூறு பரப்பப்பட்டுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையத்தில் அளித்த புகாரில் கூறியுள்ளார்.

லாட்டரி அதிபர் சார்லஸ் மார்ட்டினின் குடும்பமே இந்த முறை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் களமிறங்கி உள்ளது. மார்ட்டின் குடும்பம் பல்வேறு நிறுவனங்களை நடத்திவரும் நிலையில், பாஜக, திமுக என அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கட்சி பேதமின்றி நன்கொடைகளை வாரி வழங்கி உள்ளது. இந்த நிறுவனங்கள்மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலைவ முன்னிட்டு, மார்ட்டின் குடும்பம அரசியலில் இறங்கி உள்ளது. மார்ட்டின் மனைவி, மகன் மருமகன் என  ஆளுக்கு ஒரு கட்சியில் அரசியலில் இருக்கிறார்கள். சார்லஸ் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் அதிமுக சார்பில் திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் களம் இறங்கி உள்ளார். . சார்லஜ் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்டின் புதுச்சேரியில் தனியாக கட்சி ஆரம்பித்து,  ஆளும் என்ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டணியில் இணைந்து தேர்தலில் போட்டியிடுள்ளார். ‘ லாட்டரி அதிபர் சார்லஜ் மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜூனா தவெகவில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். வில்லிவாக்கம் தொகுதியில் களம் இறங்கி உள்ளார்.

இந்த  நிலையில் அண்மையில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், லால்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் குறித்து விமர்சனம் செய்தார். இதுகுறித்து,  சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை லட்சிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது,  தேர்தல் நடத்தை விதிகளை மீறி, லால்குடி சட்டமன்றத் தொகுதியின் அதிமுக வேட்பாளரும், தனது தாயாருமான லீமா ரோஸ் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவதூறாகப் பேசினார் என்றவர்,  இந்த விவாகரத்தில் உதயநிதி ஸ்டாலின் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கோரி தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் வலியுறுத்தினார்,

“கடந்த ஏப்ரல் 11- ஆம் தேதி திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்றத் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவர், இந்த தொகுதியின் அதிமுக வேட்பாளரும், தனது தாயாருமான லீமா ரோஸ் மார்டின் குறித்து உதயநிதி ஸ்டாலின் அவதூறாகப் பேசினார. இதன்மூலம் எனது தாயாரின் கண்ணியம், மரியாதை மற்றும் சுயமரியாதையைக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. மேலும், அவை எங்கள் குடும்பத்தின் நற்பெயரையும் களங்கப்படுத்தி இருக்கிறது.

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்ததில் முதலிடத்தில் லாட்டரி அதிபர் மார்ட்டினின் நிறுவனம் எங்கள் குடும்பம் அரசியலில் ஈடுபடுவது லாட்டரி தொடர்பான செயல்களை முன்னெடுக்கதான் என்ற நோக்கத்துடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். நாங்கள் மக்களை ஏமாற்றி சம்பாதிக்கப் போகிறோம் என்று தவறான கருத்தை முன்வைத்திருக்கிறார்..

இந்த குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது, பொய்யானது மற்றும் தீய நோக்கத்துடன் முன்வைக்கப்பட்டிருக்கிறார். இத்தகைய கருத்துக்கள் தேர்தல் நடத்தை விதிகளை நேரடியாக மீறுவதாகும். குறிப்பாக, அரசியல் எதிரிகளை விமர்சிக்கும்போது அவர்கள் கொள்கைகள் மற்றும் செயல்களை மட்டுமே பேச வேண்டும் என்பதையும், தனிப்பட்ட வாழ்க்கை அல்லது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறக்கூடாது என்பதையும் இந்த விதிகள் வலியுறுத்துகிறது.  ஆனால், தேர்தல் நடத்தை விதிகளை உதயநிதி முற்றிலும் புறக்கணித்துள்ளார். தனிப்பட்டத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கிறது குடும்பத்தைக் குறிவைத்து அவதூறு பரப்பப்பட்டிருக்கிறது. மேலும் வாக்காளர்களை தவறாக வழிநடத்தும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

எனவேதான் நான் தேர்தல் ஆணையத்திடம் உதயநிதி ஸ்டாலின் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளேன்”  என்று கூறினார்.

திமுகவிற்கு ரூ.509 கோடி தேர்தல் பத்திரம் மூலம் வழங்கிய லாட்டரி அதிபர் மார்ட்டின்!

₹1368 கோடி நன்கொடை: ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கினாரா லாட்டரி அதிபர் மார்ட்டின்!

தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக-வுக்கு ரூ. 6060 கோடி நிதி… மார்ட்டின் லாட்டரியின் பியூச்சர் ஹோட்டல் நிறுவனம் ரூ. 1368 கோடிக்கு தேர்தல் பத்திரம் வாங்கியுள்ளது…

ரூ. 50 கோடி நன்கொடை: திமுக, அதிமுகவுக்கு லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவனம் அதிக நன்கொடை

[youtube-feed feed=1]