தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை எஸ்.பி.ஐ. வங்கி நேற்று தேர்தல் ஆணையத்திடம் வழங்கியதை அடுத்து இன்று அந்த தரவுகள் அனைத்தும் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் பாஜக கட்சிக்கு 6,060 கோடி ரூபாயும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 1,609 கோடியும் தேர்தல் நிதியாக வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்த இடத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 1,421 கோடியும் தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வர் கே.சி.ஆர். தலைமையிலான பாரதிய ராஷ்ட்ரிய சமிதிக்கு ரூ. 1,214 கோடியும் தேர்தல் நிதியாக வழங்கப்பட்டுள்ளது.

மாநில கட்சிகளில் பிஜு ஜனதா தளம் கட்சிக்கு 775 கோடி ரூபாயும் திமுக-வுக்கு ரூ, 639 கோடியும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 337 கோடியும் நிதி வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அதேபோல், தேர்தல் பத்திரங்கள் வாங்கிய நிறுவனங்களின் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் மார்ட்டின் லாட்டரி நிறுவனத்தின் பியூச்சர் ஹோட்டல் நிறுவனம் அதிகபட்சமாக ரூ. 1368 கோடிக்கு தேர்தல் பத்திரம் வாங்கியுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக மெகா இன்ஜினியரிங் இன்ப்ராஸ்ட்ரக்ச்சர் நிறுவனம் 996 கோடி ரூபாய்க்கும் குயிக் சப்ளை செயின் நிறுவனம் ரூ. 410 கோடிக்கும் தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது.