சென்னை,

ஜெ. மரணம் தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன், அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி, மற்றும் சுனிதா ரெட்டி ஆகியோருக்கு சம்மன் அனுப்பியிருந்தது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ப்பலோ நிர்வாக இயக்குனர் சுனிதா ரெட்டி,  ஜெயலலிதா மரணம் தொடர்பான அனைத்து ஆவணங்களும் விசாரணை ஆணையத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஒய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷனை தமிழ அரசு அமைத்தது. இந்த விசாரணை ஆணையம் ஜெ. மரணம் தொடர்பாக பலரிடம் விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஜெ. அப்பல்லோ  மருத்துவமனையில் இருந்தபோது, அவருடன் மருத்துவமனையில் இருந்தவருமான சசிகலா மற்றும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகி பிரதாப் ரெட்டி, நிர்வாக இயக்குனர் சுனிதா ரெட்டி ஆகியோருக்கு விசாரணை ஆணையத்தில் ஆஜராகுமாறும், விசாரணை குறித்த அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்க  வேண்டும் என்றும் கூறியிருந்தது.

 

அதன்படி கடந்த 12ந்தேதி  அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் விசாரணை ஆணையத்தில்  2 பெட்டி களில் கொண்டு வரப்பட்ட ஆவணங்களை நீதிபதி ஆறுமுகசாமியிடம் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நாளில் இருந்து மரணம் அடையும் வரை, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான அனைத்து விவரங்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அப்பல்லோ நிர்வாக இயக்குனரான சுனிதா ரெட்டியும் அதை உறுதிபடுத்தி உள்ளார்.