ந்தர்பார்

காங்கிரஸ் கட்சி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவாதம் அளிப்பதாக ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நியாய யாத்திரை என்ற பெயரில் பயணம் செய்து வருகிறார்.  இந்த பயணத்துக்கு ஒரு நாள் ஓய்வு அளிக்கப்பட்டது.  யாத்திரை நேற்று ஈண்டும் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நந்தர்பாரில் இருந்து தொடங்கியது.

நந்தர்பார் வந்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ்,

“காங்கிரஸ் கட்சி தனது யாத்திரையின்போது 3 உத்தரவாதங்களை அளித்துள்ளது.  அவை வேளாண் விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை. இளைஞர்களுக்கு 5 வாக்குறுதிகள். சமூக நீதிக்காகச் சாதிவாரி கணக்கெடுப்பு. ஆகியவை ஆகும். 

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதாக உத்தரவாதம் அளித்துள்ளோம். அது, பல்வேறு சாதிகளின் மக்கள் தொகையையும், நாட்டின் வளங்களில் அவர்கள் பெற்றுள்ள பங்கையும் காட்டும் எக்ஸ்ரே ஆகும். நாங்கள் நடத்தும் யாத்திரை, அரசியல் பேரணிதான். ஆனால், இது தேர்தல் பிரசாரத்தின் ஒரு அங்கம் அல்ல. காங்கிரஸ் கட்சி, அரசியல் கட்சிதான், சாமியார்கள் கூடம் அல்ல. சில தேர்தல்களில் வெற்றி பெறலாம், தோல்வி அடையலாம். 

பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்.சும் சமூகத்தைப் பிளவுபடுத்துவதற்கான எந்த வாய்ப்பையும் தவற விடுவது இல்லை. அந்த அமைப்புகளின் கொள்கைகள் அனைத்தும் பிரிவினையாக உள்ளன. பிரதமர் மோடியின் அணுகுமுறையும், கொள்கைகளும் அப்படித்தான் உள்ளன. சமூகத்தைப் பிளவுபடுத்துவதை வேகப்படுத்துவதில்தான் குறியாக இருக்கின்றனர். ராகுல்காந்தி யாத்திரை 59 நாட்களை நிறைவு செய்துள்ளது. வருகிற 17-ந்தேதி, மும்பையில் யாத்திரை நிறைவடையும். அதே நாள் இரவு, மும்பை சிவாஜி பூங்காவில் ‘இந்தியா’ கூட்டணி பொதுக்கூட்டம் நடைபெறும்” 

என்று செய்தியாளர்களிடம் கூறி உள்ளார்.