டெல்லி: தேர்தல் பத்திரம் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்  என  குடியரசு தலைவருக்கு  டெல்லி பார் கவுன்சில் கடிதம் எழுதி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில், பார்கவுன்சில் தலைவர் தன்னிச்சையாக இந்த கடிதத்தை எழுதி உள்ளதாக பார்கவுன்சில் செயலாளர் ரோஹித் பாண்டே கண்டனம் தெரிவித்து உள்ளார்.

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த கூடாது என்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு உச்ச நீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் ஆதிஷ் அகர்வாலா கடிதம் எழுதி உள்ளார். அதில், தேர்தல் பத்திரங்கள் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை நடைமுறைப்படுத்த கூடாது எனவும் வழக்கை மீண்டும் விசாரிக்க பரிந்துரைக்க வேண்டும் எனவும்  வலியுறுத்தி உள்ளார்.

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் முறையை கடந்த மாதம் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அதோடு, திட்டம் நடைமுறைக்கு வந்த கடந்த 6 ஆண்டுகளில் எந்தெந்த கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் எவ்வளவு நிதி பெற்றுள்ளன? என்பது தொடர்பான விவரங்களை, மார்ச் 6ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் பத்திரங்களை விநியோகித்த எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிட்டது.

பரபரப்பை கிளப்பிய தேர்தல் பத்திரங்கள் வழக்கு:
இந்த விவரங்களை தேர்தல் ஆணையம் மார்ச் 13ம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை வெளியிட கூடுதல் அவகாசம் கேட்டு எஸ்.பி.ஐ. வங்கி உச்ச நீதிமன்றத்தை நாடியது.

கூடுதல் அவகாசம் கோரி எஸ்.பி.ஐ. வங்கி தாக்கல் செய்த மனுவை நேற்று விசாரணைக்கு எடுத்து கொண்ட இந்திய தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, அதிரடி உத்தரவை பிறப்பித்தது. இன்றுக்குள் விவரங்களை சமர்பிக்க 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு மீண்டும் கடந்த 11ந்தேதி (மார்ச்  11, 2024)  உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தரவுகளை தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ வங்கி  மார்ச் 12ந்தேதி அன்று  சமர்பித்துள்ளது. எஸ்பிஐ வங்கி சமர்பித்த தரவுகளை வரும் 15ஆம் தேதி, மாலை 5 மணிக்குள் தங்கள் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தேர்தல் பத்திரத்தை வாங்கியவர்களின் பெயர்கள் மற்றும் அவர்கள் எவ்வளவு ரூபாய்க்கு நன்கொடை கொடுத்தார்கள் என்பது பற்றிய தகவலையும், எந்த அரசியல் கட்சி எவ்வளவு நன்கொடை பெற்றார்கள் என்பது பற்றிய தகவலையும் தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ வங்கி தனித்தனியே அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த கூடாது என்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு உச்ச நீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் ஆதிஷ் அகர்வாலா கடிதம் எழுதி உள்ளார். அதில், தேர்தல் பத்திரங்கள் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை நடைமுறைப்படுத்த கூடாது எனவும் வழக்கை மீண்டும் விசாரிக்க பரிந்துரைக்க வேண்டும் எனவும்.,  உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு,  “அரசியலமைப்பு முட்டுக்கட்டையை உருவாக்கும், இந்திய நாடாளுமன்றத்தின் கம்பீரத்தை குழிதோண்டிப் புதைக்கும் வகை யிலும், நாடாளுமன்றத்தில் கூடியிருக்கும் மக்கள் பிரதிநிதிகளின் கூட்டு அறிவுக்குக் குழிபறிக்கும் வகையிலும், அரசியல் கட்சிகளின் ஜனநாயகச் செயல்பாடுகளைக் கேள்விக்குறியாக்கும் வகையிலும் உள்ளது.

தேர்தல் பத்திர நன்கொடையாளர்களின் பெயர்களை வெளியிடு வது ஆபத்தானது என்றும், அது பெருநிறுவன சுதந்திரத்தில் அதிர்ச்சிகரமான  விளைவை ஏற்படுத்தும் அதனால், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான  தீர்ப்புகளை வழங்க உச்ச நீதிமன்றத்தை  அனுமதிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி உள்ளார்.

இதற்கிடையில், குடியரசுத் தலைவருக்கு இத்தகைய கடிதம் எழுத பார் கவுன்சிலின் அனுமதியை ஆதிஷ் அகர்வாலா பெறவில்லை எனக்கூறி, அவருக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக அந்த அமைப்பின் செயற்குழு சார்பில் செயலாளர் ரோஹித் பாண்டே அறிக்கை வெளியிட்டுள்ளார்.

குடியரசுத் தலைவருக்கு இத்தகைய கடிதம் எழுத பார் கவுன்சிலின் அனுமதியை ஆதிஷ் அகர்வாலா பெறவில்லை எனக்கூறி, அவருக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக அந்த அமைப்பின் செயற்குழு சார்பில் செயலாளர் ரோஹித் பாண்டே கண்டனம் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்கள் வெளிவந்தால், அதன் ஆதாயம் பெற்ற பாஜக உள்பட கட்சிகள் மட்டுமின்றி, நன்கொடை வழங்கிய பெரு நிறுவனங்கள் மீதான மக்களின் மனநிலை மாறும் வாய்ப்பு உள்ளதாகவும், இது நிறுவனங்களில்  சிக்கலை ஏற்படுத்தும் என்றும், இதனால் பொருளாதார பாதிப்பு உருவாகும் என்றும் பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர். இதனால், இந்த விவகாரம் உயர் மட்டத்தில் பிரளயத்தை ஏற்படுத்தி உள்ளது.