அபுதாபி விமான நிலையத்தில் நண்பரை அழைக்க வந்த நான்கு இந்திய இளைஞர்களுக்கு ஜாக்பாட் அடித்தது.

விமான நிலையததில் உள்ள லாட்டரி சீட்டு கடையில் வாங்கிய ஸ்க்ராட்ச் கார்டுக்கு 11 லட்ச ரூபாய் பரிசுத்தொகை கிடைத்தது.

கோபி டூட்டி, திருப்பதி பீமராஜு, திருப்பதி வங்கப்பள்ளி மற்றும் ரமேஷ் அண்ணாதுரை ஆகிய நான்கு பேர் தங்கள் நண்பரின் வருகைக்காக அபுதாபி விமான நிலையம் சென்றனர்.

அப்போது அங்கிருந்த ட்ரீம் ஐலாண்ட் நிறுவனத்திற்கு சொந்தமான கடையில் நான்கு பேரும் சேர்ந்து 50 திராம் (ரூ. 1100) கொடுத்து லக்கி 7 என்ற ஸ்க்ராட்ச் கார்டை வாங்கியுள்ளனர்.

அவர்கள் வாங்கிய ஸ்க்ராட்ச் கார்டுக்கு 50000 திராம் இந்திய மதிப்பில் சுமார் 11.2 லட்ச ரூபாய் பரிசு விழுந்துள்ளது.

ட்ரீம் ஐலாண்ட் நிறுவனம் ஸ்க்ராட்ச் கார்ட் என்ற நேரடி பரிசுச் சீட்டு மையங்களை சமீபத்தில் துவங்கிய நிலையில் இதுவே அதிக பரிசுத் தொகை விழுந்த ஸ்க்ராட்ச் கார்ட் என்று கூறப்படுகிறது.

இந்தப் பரிசுத்தொகையை அவர்கள் நான்கு பேரும் சரிசமமாக பிரித்துக்கொள்ளப் போவதாகவும் அதனை அவர்கள் குடும்பத்திற்கு அனுப்ப போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.