சூரியனை ஆய்வு செய்யும் நோக்கில் ஆதித்யா எல்1 இன்று விண்ணில் ஏவப்பட்ட உள்ள நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதியில் நேற்று பிரார்த்தனை செய்தனர்.

ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஆதித்யா எல்1 விண்கலம் பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலம் இன்று காலை 11:50 க்கு விண்ணில் ஏவப்பட்ட உள்ளது.

பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ. தூரத்தில் சூரியன் மற்றும் பூமி இரண்டுக்கும் இடையிலான ஈர்ப்பு விசைக்கு மைய்யமான எல்1 லாக்ரேஞ்ச் புள்ளியில் ஆதித்யா எல்1 நிலை நிறுத்தப்பட உள்ளது.

சூரியனின் வளிமண்டலத்தையும் சூரிய புயல் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள உள்ள இந்த விண்கலம் சூரியனை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பும் முதல் விண்கலம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சந்திரயான்-3 ஏவப்படுவதற்கு முன் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்ததைப் போல் இம்முறையும் ஆதித்யா எல்1 திட்டம் வெற்றி பெற இஸ்ரோ விஞ்ஞானிகள் திருமலை சென்று திருப்பதி பாலாஜியிடம் பிரார்த்தனை செய்துள்ளனர்.