ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் மும்பையில் நேற்றிரவு அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

ரூ. 538 கோடி மோசடி தொடர்பாக கனரா வங்கி கொடுத்த புகாரின் பேரில் மும்பையில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் நேற்று ஆஜரான நரேஷ் கோயலிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு சுமார் ரூ. 1,410.41 கோடியை கமிஷனாக வழங்கியது தணிக்கை தடயவியல் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் கைது செய்யப்பட்ட நரேஷ் கோயல், பிஎம்எல்ஏ நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.