சென்னை

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினத்தையொட்டி சென்னையில் ஆகஸ்ட் 7 அன்று சர்வதேச மராத்தான் போட்டி நடைபெற உள்ளது.

முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி சென்னையில் வரும் ஆகஸ்ட் 7 அன்று சர்வதேச மராத்தான் போட்டி நடைபெற உள்ளது.  இந்தப் போட்டியில் பங்கேற்க உள்ளவர்கள் இணையம் மூலம்  பதிவு செய்து வருகின்றனர்.

இதுவரை 50000க்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளனர்.  இந்த போட்டி சென்னை பெசண்ட் நகரில் தொடங்கி மாநிலக் கல்லூரி வரை நடைபெற உள்ளது.    இந்த போட்டியில் பங்கேற்க இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பலர் பதிவு செய்துள்ளனர்.

இந்த போட்டியில் ல் 42 கி.மீ மற்றும் 21.1 கி.மீ பிரிவுப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.1 லட்சம் ரூபாயும் 2-ம் பரிசு 50 ஆயிரம், 3ம் பரிசு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவிர 10 கி.மீ. பிரிவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.50 ஆயிரம், 2-ம் பரிசு 25 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.15 ஆயிரம் ஆகும்.

இதைப் போல 5 கி.மீ., பிரிவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.25 ஆயிரம், 2ம் பரிசு ரூ.15 ஆயிரம், 3-ம் பரிசு 10 ஆயிரம் ஆகும்.

ஆகஸ்ட் 7 ஆம் தேதி அன்றே இந்த  பரிசுகளை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வழங்க உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.