புதுக்கோட்டை

ன்று நடந்த புதுக்கோட்டைத் தேர் விபத்து குறித்து அறநிலையத்துறை விசாரணை நடத்த உள்ளது.

இன்று புதுக்கோட்டையில் உள்ள பிரகதாம்பாள் கோயிலில் தேரோட்டம்  நடைபெற்றது.   இந்த தேரோட்டத்தின்போது தேர் சாய்ந்து விபத்துக்குள்ளானதில் பக்தர்கள் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.  இன்றைய தேரோட்டத்தின்போது தேர் சாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விபத்தை தொடர்ந்து சப்பரங்களில் வைக்கப்பட்டிருந்த சுவாமி சிலைகளும் கோயிலுக்குள் எடுத்துச் செல்லப்பட்டுச் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.  விபத்து நடந்த இடத்தில், இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் அனிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பிறகு அனிதா செய்தியாளர்களிடம்,

“கடந்த 2 ஆண்டுகளாக இந்த கோயிலின் தேர் ஓடவில்லை. தேர் சரிசெய்யப்பட்டு இன்று தேரோட்டம் நடந்தது.  தேரில்  அதிகப்படியான கூட்டத்தின் காரணமாக பிடிமானம் இல்லாததால், தேர் சரிந்துவிட்டது.  மேலும் தொழில்நுட்ப ரீதியாக என்ன கோளாறு என்பது குறித்து விசாரித்து  வருகிறோம்.

தேருக்கு பொதுப்பணித்துறையிடம் முறையாகச் சான்றிதழ் வாங்கப்பட்டுள்ளது. மேலும் சான்றிதழ் வாங்காமல், அனுமதிக்க மாட்டோம். இந்த விபத்து எதிர்பாராமல் நடந்துள்ளது..  இன்று தேர் சரிந்து விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து முறையாக துறை ரீதியான விசாரணை நடத்தி  உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.  வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கப்படும்”

எனத் தெரிவித்துள்ளார்.