சென்னை

ன்று பொன்னியின் செல்வன் முதல் பாகம் படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் திரைப்படம் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம்  த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி உள்ளது.  ஏற்கனவே இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி பலரின் வரவேற்பைப் பெற்றது.  தற்போது இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது.

இன்று வெளியான ‘பொன்னி நதி’ என்ற இந்த பாடலை ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து பாடகர் பாம்பா பாக்யா பாடியுள்ளார். இளங்கோ கிருஷ்ணன் பாடலை எழுதியுள்ளார். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் கார்த்தி, “இந்தப் படத்தை எப்படி முடிக்க முடியும் என யோசித்துக்கொண்டிருந்த போது மணிரத்னம் 120 நாட்களில் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களையும் எடுத்து முடித்துவிட்டார்.

நாங்கள் விடியற்காலை 2.30 மணிக்கு மேக்அப் போடுவோம். மேக்அப் போட 30 பேர் தயாராக இருப்பார்கள்.  இவர்கள் யாரும் தூங்க மாட்டார்கள்.  மேக் அப் முடிந்தது, காலையில் 6.30 மணிக்கு முதல் ஷாட் எடுப்போம்.  நாம் நாவலைப் படித்துவிட்டு கற்பனையில் ஷூட்டிங் ஸ்பார்ட்டுக்கு சென்றால் மணிரத்னம் அதை வேறு மாதிரி தரமாக உருவாக்கி வைத்திருப்பார்.

இப்படி ஒரு படம் எடுப்பதற்கு ஒரு இயக்குநர் பிறந்துதான் வர வேண்டும்.  அதற்கு 10 வருடமாவது ஆகும்  மணிரத்னம் மட்டும் தான் இப்படியொரு படத்தை இயக்க முடியும்.  இந்தப் படத்தில்  நடிகர் ஜெயராம்  முக்கியமான அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் அவர் படத்தில் ஒரு விஷயம் செய்துள்ளார்.  உங்களுக்குப் படம் பார்க்கும்போது அது புரியும்.“ எனத் தெரிவித்துள்ளார்.