காஞ்சிபுரம்: தாக்கிய இன்ஸ்பெக்டர்! மயக்கமான காவலர்!

Must read

a
காஞ்சிபுரம்:
ணிவகுப்பிற்கு தாமதமாக வந்த ஹெட்கான்ஸ்டபிள் காவலர் மீது ஆய்வாளர் தாக்குதல் நடத்தியதால் காவலர் வேல்முருகன் மயக்கமடைந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆயுதப்படை பிரிவில் ஆய்வாளராக பணியாற்றுகிறார் லோகநாதன். இன்று காலை அணிவகுப்புக்கு தாமதமாக வந்த தலைமை காவலர் வேல்முருகனை லோகனாதன் கடுமையாக அறைந்தார்.
இதனால் வேல்முருகன் மயங்கி விழுந்தார். இதர காவலர்கள், வேல்முருகனை உடனடியாக மருத்துவமனைக்குத் தூக்கிச்சென்றனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தலைமைக்காவலர் வேல்முருகன், உடல் நலக்குறைவு காரணமாகத்தான் இன்று சற்று தாமதமாக வந்தார் என்பது பின்னர் தெரியவந்தது. இந்த சம்பவம் காவலர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

More articles

Latest article