சென்னை கொடூரம்:  கைப்பிடி சோறுக்காக, நாய் சங்கிலியால் பணிப்பெண்ணை அடித்து வீழ்த்திய வீட்டு உரிமையாளர்!

Must read

கனகவல்லி
கனகவல்லி

சென்னை:
சி பொறுக்காமல் சாப்பிட்ட வேலைக்கார பெண்ணை கொடூரமாக தாக்கிய வீட்டு உரிமையாளர்!
சமைத்ததும் முதலில் சாப்பிட்ட வேலைக்கார பெண்ணை அந்த வீட்டின் உரிமையாளர் கொடூரமாக தாக்கிய சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் உள்ள ஒரு பணக்கார குடும்பத்தில் ஆத்தூரை சேர்ந்த கனகவள்ளி என்ற பெண் வீட்டு வேலை செய்து வருகிறார். அந்த வீட்டின் கார் ஷெட்டில் தங்கியிருக்கும் இவருக்கு, நாள் முழுதும் வேலை இருக்கும்.
இவரை வீட்டு உரிமையாளரும், அவரது மனைவியும் கடுமையாக வேலைவாங்கி வந்திருக்கிறார்கள். உணவும் நேரத்துக்கு அளிக்க மாட்டார்கள்.
இந்த நிலையில் காலை நேரத்தில் திடுமென உறவினர்கள் வந்துவிட்டதால் காலை உணவு போதவில்லை. ஆகவே கனகவல்லிக்கு கிடைக்கும் சிறிது உணவும் இல்லாமல் போய்விட்டது.
ஆகவே மதியம் உணவை சமைத்த கனவகவல்லி, பசி பொறுக்க முடியாமல் சிறிது சாதத்தை எடுத்து தட்டில் போட்டு சாப்பிட முனைந்துள்ளார்.
மயங்கிய நிலையில்...
மயங்கிய நிலையில்…

அப்போது அடுக்களைக்கு வந்த வீட்டு உரிமையாளர், “நீ சாப்பிட்ட மிச்ச சாதத்தை நாங்கள் சாப்பிட வேண்டுமா” என்று திட்டி, நாய் கட்டும் சங்கிலியை எடுத்து கனகவள்ளியை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.  அடி தாங்க முடியாத கனகவள்ளி மயங்கி விழுந்தார்.
அவரது மயக்கம் தெளிந்ததும் வெளியே தள்ளிய வீட்டு உரிமையாளர், அவரது துணிப்பையையும் வீசி எறிந்துள்ளார்.  மீண்டும் மயக்கமாகி சாலையில் விழுந்துவிட்டார் கனகவல்லை. அவரை பார்த்த சிலர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவே, காவல்துறையினர் வந்து கனகவல்லியை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
கனகவல்லியை கொடூரமாக தாக்கிய வீட்டு உரிமையாளர் பெரும் பணக்காரர் என்றும் அதனால்தான் அவரது பெயரை காவல்துறையினர் வெளியிடவில்லையா என்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கேளஅவி எழுப்புகிறார்கள்.
poor servant attacked by house owner

More articles

Latest article