இந்திய ரயில்வே ‘சாபுதானா’ ஸ்பெஷல்… நவராத்திரியை முன்னிட்டு வெங்காயம், பூண்டு இல்லாத உணவு…

Must read

செப். 26 முதல் அக்டோபர் 5 வரை ரயிலில் பயணம் செய்யும் பிரயாணிகளுக்கு ஸ்பெஷல் சாப்பாடு வழங்க ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

நவராத்திரி காலமான இந்த நாட்களில் விரத உணவை தவிர மற்ற உணவுகளை சிலர் தவிர்த்து வருகின்றனர்.

அந்த பயணிகளை கருத்தில் கொண்டு வெங்காயம், பூண்டு சேர்க்காத விரத உணவு வகைகளான, சாபுதானா டிக்கி, சாபுதானா கிச்சடி, சாபுதானா பப்பட், சாபுதானா கீர் உள்ளிட்டவைகளை அவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்துள்ளது.

இது குறித்து ரயில்வே அமைச்சகம் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளதை அடுத்து ரயில்வே துறையின் இந்த நடவடிக்கை விரதம் இருப்பவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

 

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article