புதுடெல்லி: இந்தியாவைப் பொறுத்தவரை, இணையப் பாதுகாப்பு என்பது அலட்சியப்படுத்தப்படும் ஒரு விஷயமாகவே இருந்து வருகிறதென்பது, சமீபத்தில், பாரதீய ஜனதா கட்சியின் வலைதளம் முடக்கப்பட்டதின் மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

சமீபத்திய ஆய்வு ஒன்றில், ‘இந்தியா முழுமையுமுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இணையப் பாதுகாப்பு பிரச்சினையைக் கொண்டுள்ளன’ என்பது தெரியவந்தது.

இணையப் பாதுகாப்பிற்கான முக்கிய அம்சமான HTTPS (குறியிடப்பட்டது) ஐ, சுமார் 84% இந்திய அரசியல்வாதிகள் பயன்படுத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த HTTPS குறியீடு மிகவும் பாதுகாப்பானது என உலகின் பெரும்பாலான இணையப் பாதுகாப்பு நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.

நிதி தொடர்பான விபரங்கள் ஆகியவை குறித்த தகவல்களை நிரப்புவதற்கான இடங்களை, வலைப்பக்கங்கள் கொண்டிருப்பதால், அரசியல் கட்சிகளின் இணையதளங்கள் அடிக்கடி தாக்குதல்களுக்கு ஆளாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

– மதுரை மாயாண்டி