பெர்லின்

ஜெர்மனியில் நடைபெறும் சிறப்பு ஒலிம்பிக் உலகப் போட்டியில் 800 மீ ஓட்டத்தில் இந்திய வீராங்கனை கீதாஞ்சலி தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

ஜெர்மனியில் சிறப்பு ஒலிம்பிக் உலக விளையாட்டுப் போட்டிகள் பெர்லின் நகரில் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் கீதாஞ்சலி நாக்வேகர் தங்கப் பதக்கம் வென்றார்.  கீதாஞ்சலி கோவா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

இதை போல் ஆடவருக்கான பளுதூக்குதலில் இந்திய வீரர் விஷால் 4 வெள்ளிப் பதக்கங்கள் வென்றார்.  விஷால், ஸ்வாட் (122.50 கிலோ எடை), டெட்லிஃப்ட் (155), பெஞ்ச் பிரஸ் (85) ஆகிய பிரிவுகளில் அசத்தினார்.

தவிர ஒருங்கிணைந்த பிரிவிலும் விஷால் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். தற்போது 16 வயதாகும் விஷால் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார்.