டில்லி

ந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு யோகா செய்யும் படத்தைக் காங்கிரஸ் கட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இன்று உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஐநா சபை இந்த தினத்தைச் சர்வதேச யோகா தினமாக அறிவித்ததை அடுத்து 9- ஆம் ஆண்டாக இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு யோகா செய்யும் படத்தைக் காங்கிரஸ் கட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

அந்த பதிவில்”,

“சர்வதேச யோகா தினத்தில் பண்டித நேருவுக்கு நன்றி தெரிவிக்கிறோம். யோகாவைப் பிரபலப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியவர் அவர். யோகாவை தேசிய கொள்கையின் ஒரு பகுதியாகவும் ஆக்கினார்.  உடல் மற்றும் மனதின் நலனுக்கான இந்த தொன்மையான கலையை, தத்துவத்தைப் பாராட்டுவோம்; யோகாவை வாழ்வின் ஒரு பகுதியாக இணைத்துக்கொள்வோம்”

என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் இதற்கு,

“உண்மை! இன்றைய தினத்தைச் சர்வதேச யோகா தினமாக ஐ.நா மூலம் அறிவிக்கச் செய்து இதனை சர்வதேச அளவில் பிரபலப்படுத்திய நமது அரசாங்கம், பிரதமர் அலுவலகம், வெளியுறவுத்துறை உள்பட அனைவரையும் நாம் அங்கீகரிக்க வேண்டும். யோகா நமது மென் சக்தியின் ஒரு முக்கிய அங்கம். இதை நான் பல பத்தாண்டுகளாகக் கூறி வருகிறேன். யோகாவுக்கு தற்போது கிடைத்திருக்கும் அங்கீகாரம் மகிழ்ச்சி அளிக்கிறது”

என பின்னூட்டம் அளித்துள்ளார்.