டெல்லி: இந்தியாவில் கடந்த  70 நாட்களுக்கு பிறகு இன்று கொரோனா தொற்று 84,332 ஆக சரிந்து வருகிறது. இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா 2வது அலையின் தாக்கம் இந்தியாவில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியது. கடந்த  ஏப்ரல் மாதம் படிப்படியாக உயரத்தொடங்கிய பாதிப்பு மே மாத தொடக்கத்தில் தினசரி பாதிப்பு 3 லட்சமாக உயர்ந்தது. தொற்று பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கை காரணமாக, தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த வாரம் 1லட்சத்துக்கும் கீழே குறைந்த நிலையில், தற்போது, 70 நாட்களுக்கு பிறகு 84,332 ஆக குறைந்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 84,332 ஆக  உள்ளது. இதனால், இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 2,93,59,155 ஆக உயர்ந்துள்ளத.

தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர் 1,21,311 பேர். இதுவரை குணமடைந்தோர்: 2,79,11,384 பேர்.

கடந்த 24 மணிநேரத்தில் தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்தோர்  4,002 பேர்.  இதுவரை ஏற்பட்டுள்ள  உயிரிழப்புகள்: 3,67,081

தற்போது சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 10,80,690

இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர்: 24,96,00,304