லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில், கோவில் நிலத்தில் விளைந்த விலைபொருட்களை விற்க சென்றவர்களிடம், கோவிலில் உள்ள சாமி (கடவுள்) யின் ஆதார் அட்டையை  அதிகாரிகள் கேட்டுள்ளனர். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மத்தியஅரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டப்படி, விளைபொருட்களை விற்பனை செய்பவர்கள், அதற்குரியவர்களின் ஆதார் அட்டையை பதிவிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தரப் பிரதேசம் பண்டா (Banda) மாவட்டத்தில்  குர்ஹரா (Kurhara) என்ற கிராமத்தில் அமைந்துள்ள ராம்- ஜானகி கோயிலுக்குச் சொந்தமாக ஏராளமான  நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில் கோதுமை பயிரிடப்பட்டு,அதை விற்பனை செய்து கோவில் பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

நடப்பாண்டு,  இந்த நிலத்தில் சுமார் 100 குவிண்டால் கோதுமை விளைந்துள்ளது. இதை விற்பனை செய்ய கோயில் பணியாளர்கள் கடந்த வாரம்  சந்தைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அப்போது, அதிகாரிகள், அவர்களிடம், விளைபொருட்களை, சந்தையில் பதிவு செய்ய கடவுளுக்கான ஆதார் அட்டையை கேட்டுள்ளனர். இதனால்,  கேட்டதால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கோதுமையை விற்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.

புதிய வேளாண் சட்டங்களின்படி சந்தைகளில் விளைபொருட்களை விற்க ஆதார் அட்டை மூலம் பதிவு செய்தவர்களால் மட்டுமே முடியும் என்பதால், அவர்களால் விளைபொருளை விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளத. இதுகுறித்து, கருத்து தெரிவித்த  கோவில் நிர்வாகிகள்,  விளைபொருட்கள் இத்தனை ஆண்டுகளாக  பிரச்சினையின்றி விற்பனையாகி வந்தன. வழக்கம்போல், இந்த வருடம் விளைந்த 100 குவிண்டால் கோதுமையைக் கடந்த வாரம் விற்பனை செய்ய கோயில் பணியாளர்கள் சந்தைக்கு எடுத்துச் சென்றோம். ஆனால், விற்பனை செய்ய முடியவில்ல.  எனவே, வேறு வழியின்றி இந்த கோதுமையை தரகர் மூலமாக இந்த வருடம் விற்க முடிவு செய்துள்ளோம். அடுத்த வருடத்திற்குள் அரசிடம் பேசி ஏதாவது வழி ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளனர்.

வேளாண் சட்டத்தில் கோர முகம் இப்போதுதான் வெளியே தெரிய வந்துள்ளது. அதனால்தான் விவசாயிகள் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என போராடி வருகின்றனர்.