டெல்லி

தென்மேற்கு பருவமழை கேரளாவில் 5 நாட்களில் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை பெய்வது வழக்கம் இந்த பருவ மழை கேரளாவை மையமாக வைத்து இந்த பருவ மழை தொடங்கும். இன்னும் 5 நாட்களுக்குள் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1-ந்தேதி தொடங்கும் நிலையில் இந்த வருடம் ஒரு நாட்கள் முன்னதாக தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவக்கூடும்  இந்த பருவமழை தென் அரபிக்கடல், மாலத்தீவு, கொமரியன் பகுதி, லட்சத்தீவுகளின் சில பகுதிகளில் உருவாகக்கூடும். தென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடல், வடகிழக்கு வங்கக்கடல் சில பகுதிகளிலும், வட கிழக்கில் சில பகுதிகளிலும் இதே நாட்களில் பருவமழை தொடங்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை ஆகேரளாவில் தொடங்கிய பிறகுதான் நாட்டின் பல இடங்களில் ரம்பிக்கும். தமிழகத்திலும் படிப்படியாக பருவமழை தொடங்குவது வழக்கம். கேரளாவில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருவதால், அதனுடைய தாக்கம் தென் தமிழக பகுதிகளான கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.விரைவில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதால் இதனுடைய தாக்கம் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.