டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 26,041 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், தொற்று பாதிப்பில் இருந்து  29.621 பேர் குணமடைந்து உள்ளதுடன், சிகிச்சைபலனின்றி  276 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை (காலை 8 மணி வரையிலான தகவல்) வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த  24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக 26,041 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,36,78,786 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று மேலும்  276 பேர் சிகிச்சை பலனின்ற இறந்துள்ளனர். இதன்மூலம்  நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,47,194 ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.33% ஆக  உள்ளது

நேற்று ஒரே நாளில் தொற்றில் இருந்து 29,621 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,29,31,972  ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 97.78% ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,99,620 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.89% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரு நாள் மட்டும் 38,18,362 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.. இதுவரை 86,01,59,011 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.