இந்தியாவில் 18-44 வயதுக்குட்பட்டவர்களில் 53.5% பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்! மத்திய அரசு

Must read

டெல்லி: நாடு முழுவதும் 18-44 வயதுக்குட்பட்டவர்களில் 53.5% பேர் தடுப்பூசி செலுத்தி இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் தடுப்பூசி  செலுத்தும் பணிகள் துரிமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு செலுத்தப்பட்ட நிலையில், பின்னர் 60வயதுக்கு மேற்பட்டோருக்கும், பின்னர் 45வயதுக்கு மேற்பட்டோருக்கும் என தடுப்பூசி போடப்பட்டு வந்தது. அதைத் தொடர்ந்து 18 வயது முதல் 44வயது உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்திய அரசு இதுவரை 83.54 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி மருந்துகளை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளது (26 செப்டம்பர், 2021, காலை 8:00 மணி வரை)  4.56 கோடிக்கும் அதிகமான டோஸ் இன்னும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் நிர்வகிக்கப்படுகிறது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை விடுத்துள்ள செய்திக் குறிப்பில், நாடு முழுவதும இதுவரை இதுவரை 85 கோடியே 60 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், 34 கோடியே 66 லட்சம் பேர் முதல் டோஸ் தடுப்பூசியைப் போட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் 7 கோடியே 34 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இரண்டு டோஸ் மருந்துகளையும் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. அத்துடன், 18-44 வயதுக்குட்பட்டவர்களில் 53.5% பேர் தடுப்பூசி செலுத்தி இருப்பதாகவும்  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

More articles

Latest article