மும்பை: தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியினர் இன்று காலை விமானத்தில் புறப்பட்டனர். அங்கு 44 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு போட்டிகளில் ஆடுகின்றனர்.

டி20 உலககோப்பை  தொடருக்கு பிறகு இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஆடியது. அதைத்தொடர்ந்து, தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு  3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர் டிசம்பர் 26 அன்றும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதையடுத்து, ஒருநாள் தொடர் ஜனவரி 19 அன்றும் தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 44 நாட்கள் இந்திய அணியினர் தென்னாப்பிரிக்காவில் தங்கி இருக்கின்றனர்.

இதில் டெஸ்ட் போட்டியில் ஆட இந்திய கிரிக்கெட் அணியினர் இன்று விமானத்தில் தென்னாப்பிரிக்கா பயணம் செயதனர். விராட்கோலி தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்க நாட்டில் உள்ள செஞ்சூரியன் மைதானத்தில் அந்த நாட்டு அணியுடன்  டெஸ்ட் போட்டியில் ஆட உள்ளது.

இதுதொடர்பாக பி.சி.சி.ஐ. தனது டிவிட்டர் பக்கத்தில் வௌியிட்ட புகைப்படத்தில் ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், உமேஷ் யாதவ், புஜாரா, ரஹானே உள்ளிட்டோர் விமானத்தில் பயணிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இந்திய அணியில் கேப்டன் கோலியுடன், கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், ஸ்ரேயாஸ் அய்யர், ஹனுமா விஹாரி, ரிஷப்பண்ட், சஹா, அஸ்வின், இஷாந்த் சர்மா, ஷமி உள்ளிட்டோரும் இடம்பிடித்துள்ளனர்.

இதற்கிடையில், தென்னாப்பிரிக்காவில் நடைபெற உள்ள  ஒருநாள் போட்டிக்கு, அணியின் கேப்டன் கோலி நீக்கப்பட்டு,  ரோஹித் சர்மா பெயரை பிசிசிஐ அறிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்க அணியில் டீன் எல்கர், தெம்பா பவுமா, குயின்டின் டி காக், ரபாடா, கேஷவ் மகாராஜா, எய்டன் மார்க்ரம், நோர்ட்ஜே, வான்டர்டு சென் உள்ளிட்ட 21 வீரர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய தொடருக்காக தென்னாப்பிரிக்க அணியில் இடம்பிடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவேன்! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி…