இசைஞானி இளையராஜா இசையமைத்த பல்வேறு படங்களில் பணியாற்றிய இசைக்கலைஞர் சந்திரசேகர் இன்று காலமானார்.

கிட்டார் இசைக்கலைஞரான இவர் இளையராஜா இசையமைத்த ‘இளய நிலா பொழிகிறதே’ உள்ளிட்ட பல பாடல்களில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

பிரபல இசையமைப்பாளர்கள் கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், சங்கர்-கணேஷ், திவாகர் ஆகியோரிடம் கிடாரிஸ்டாக பணியாற்றியுள்ளார் சந்திரசேகர்.

சந்திரசேகர் மற்றும் அவரது இளைய சகோதரர் பிரபல டிரம்ஸ் இசைக்கலைஞர் புருஷோத்தமன் இருவரும் இளையராஜாவின் பல படங்களில் பணியாற்றியுள்ளனர்.

கிட்டாரிஸ்ட் சந்திரசேகர் மறைவு குறித்து இரங்கல் செய்தி வெளியிட்டிருக்கும் இசைஞானி இளையராஜா “என்னுடன் பணியாற்றிய எனக்கு மிகவும் பிரியமான இசைக் கலைஞரான சந்திரசேகர் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் துயருற்றேன்” என்று தெரிவித்துள்ளார்.