இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட அஜித்தின் AK62 படம் சில காரணங்களால் கைவிடப்பட்டது.

இதையடுத்து இந்தப்படத்தை ‘தடம்’, ‘கலகத் தலைவன்’ ஆகிய படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

அஜித்தின் 62வது படம் குறித்த அறிவிப்பு அவரது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தில் ‘கல்யாணம் முதல் காதல் வரை’, ‘யாரடி நீ மோகினி’, ‘கயல்’ ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான சைத்ரா ரெட்டி நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

லைக்கா நிறுவனம் தயாரிக்க இருக்கும் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். முழுக்க முழுக்க ஆக்ஷனில் உருவாக்க திட்டமிட்டுள்ள இந்த படத்தின் கதை இறுதி செய்யப்பட்டுவிட்டது.

இதையடுத்து நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

 

இந்த நிலையில், அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை சின்னத்திரை நடிகை சைத்ரா ரெட்டி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

பெங்களூரைச் சேர்ந்த சைத்ரா ரெட்டியின் இந்தப் பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.