ஆந்திராவில் பரபரப்பு: வாக்காளர்களுக்கு கொடுக்க பாஜக வங்கி கணக்கில் இருந்து எடுத்த பணம் ரூ.8 கோடி தேர்தல் அதிகாரிகளால் பறிமுதல்…!

Must read

ஐதராபாத்:

ந்திர மாநில பாஜக வங்கி கணக்கில் இருந்து ரூ.8 கோடி எடுத்த ரொக்க பணம் தேர்தல் அதிகாரி கள் மற்றும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த பணம் கருப்பு பணம் என்றும், வாக்காளர்களுக்கு கொடுக்க எடுக்கப்பட்டதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படு கிறது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும்  தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் பண வேட்டை தொடர்ந்து வருகிறது. ஆந்திர மாநிலத்தில்  நடத்திய சோதனையில், காரில் எடுத்துச் சென்ற ரூ.2 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.  அதற்கான அவணங்கள் இல்லாத நிலையில், பணத்தை கொண்டு வந்த 2 பாஜகவினரை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் நடத்திய அதிரடி விசாரணையை தொடர்ந்து, அதை எடுத்து வந்த பாஜகவினரிடம் நடத்திய விசாரணையின்போது, இந்த பணம் நாராயணகுண்டா இந்தியன் வங்கி கிளையில் இருந்து நந்திராஜு கோபி என்பவர் கொடுத்ததாக கூறி உள்ளனர்.

அதைத்தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் குறிப்பிட்ட வங்கிக்கு விரைந் தனர். அங்கு ரூ.6 கோடி ரொக்கப் பணத்துடன் நந்திராஜு கோபி என்பவர் இருந்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், அவருடன் சேர்ந்து, மாநில பாஜக அலுவலகத்தின் உதவியாளர் சலபதி ராஜு என்பவரையும் கைது செய்தனர். மேலும் விசாரணையை தொடர்ந்து   7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாஜக இந்த நேரத்தில் பணத்தை ரொக்கமாக எடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த பணத்தை கருப்பு பணமாக இருக்கலாம் என்று காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர்.

வங்கியில் இருந்து ரூ.8 கோடி ரொக்கம் எடுக்கப்பட்டுள்ள விவகாரத்தில் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பணம் எடுக்க வங்கியில் கொடுக்கப்பட்ட காசோலையில்,  மாநில பாஜக தலைவர் கே.லட்சுமணன் கையெழுத்து உள்ளது. மேலும், பணம் எடுக்கப்பட்ட வங்கி கணக்கு பாஜகவுக்கு சொந்தமானது என்பதும் நிரூபணமாகி உள்ளது.

இதன் காரணமாக ஆந்திர மாநிலத்தில் வாக்காளர்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்க பாஜக வினர் மேற்கொண்டு வரும் முயற்சி அம்பலமாகி உள்ளது.

தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில்,   நாடு முழுவதும் 1582 கோடி அளவுக்கான மது பானங்களும், 377 கோடி ரூபாய் ரொக்க பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

More articles

Latest article