ஏர் இந்தியா விமான நிறுவனத்தை கைப்பற்றியது டாடா! மத்தியஅரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

Must read

டெல்லி: ஏர் இந்தியா விமான நிறுவனவத்தை டாடா நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக மத்தியஅரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதன்மூலம் ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் டாடா நிறுவனத்திடமே சென்றுள்ளது.

டாடா சன்ஸ் 18,000 கோடி ரூபாய் ஏலத்தில் ஏர் இந்தியாவை வென்ற ஏலதாரராக உருவெடுத்ததாக இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஏர் இந்தியாவுக்கு மாற்று வழிமுறையை ஏற்படுத்தி உள்ளது.

மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு நஷ்டத்தில் இயங்கி பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்தும், நீண்ட கால குத்தகைக்கும் விட்டு வருகிறது. அதுபோல, பெரும் நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா விமான நிறுவனத்தை   விற்பனை செய்யப்போவதாக கடந்த 2016ம்ஆண்டு அறிவித்தது. அதைத்தொடர்ந்து, அதன் பங்குகளை ஏலம் விடுவதற்கான பணிகளை முடக்கி விட்டது.

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்க பல வெளிநாட்டு நிறுவனங்கள் முன்வந்த நிலையில் டாடாவும் களமிறங்கியது. ஏனென்றால், ஏர் இந்தியா நிறுவனம் சுமார் 89ஆண்டுகளுக்கு, தற்போதைய டாடா குழு தலைவர் ரத்தன் டாடாவின் தாத்தா தொடங்கிய  டாடா ஏர்லைன்ஸ் என்ற விமான நிறுவனமாகும்.

இந்த விமான நிறுவனத்தை மத்திய அரசு பொதுத்துறையாக்கி கைப்பற்றிய நிலையில், தற்போது அந்நிறுவனம் ஏலத்துக்கு வந்ததும், டாடா மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது. இதற்கான ஏலம் கடந்த மாதம் முடிவடைந்த நிலையில், அதிக தொகைக்கு ஏலம் கேட்டு டாடா நிறுவனமே வெற்றி பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால், மத்தியஅரசு, அதை இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று கூறி வந்தது.

இந்த நிலையில், தற்போது ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் மீதான ஏலத்தில் டாடா நிறுவனம் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஏர் இந்தியா விமான நிறுவனம் மீண்டும் டாடாவின் கைகளுக்கு சென்றுள்ளனது.   ரத்தன் டாடாவின் கனவு நிறைவேறி உள்ளது.

89ஆண்டுகளுக்கு முன்பு தாத்தா தொடங்கிய ஏர்இந்தியா நிறுவனத்தை மீண்டும் கைப்பற்றிய பேரன் ரத்தன் டாடா!

More articles

Latest article