போபால்

ந்து சமுதாய தலைவர்களுக்கு அமைச்சர் அந்தஸ்து அளித்தமைக்கு இந்து மடாதிபதி ஒருவர் முதல்வர் சிவராஜ் சிங் சௌகானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் நர்மதை ஆற்றில் சட்ட விரோத மணல் அள்ளுதல், மரங்களை வெட்டுதல், போன்ற முறைகேடுகள் நடப்பதால் நதியின் வளம் கெடுவதாகவும் அதன் புனிதத் தன்மை கெடுவதாகவும் புகார் எழுந்தது.  இந்நிலையில் அதை சோதனை செய்ய யாத்திரை ஒன்று நடத்தப்போவதாக சில இந்து அமைப்பு மடாதிபதிகள் தெரிவித்தனர்.   அதை ஒட்டி அந்த மடாதிபதிகளுக்கு அமைச்சர் அந்தஸ்து அளிப்பதாக முதல்வர் சிவராஜ்சிங் அறிவித்தார்.

இந்து மடாதிபதிகள் கூட்டமைப்பு குஜராத் மாநிலத் தலைநகரான காந்திநகரில் அமைந்துள்ளது.   இதன் பெயர் சக்தி சாதனா தாம் ஆகும்.   இதன் உள் அமைப்பான பஞ்சாயத்தி நிரஞ்னை அகாதா வின் தலைவர்களில் ஒருவரான மகாமண்டேலேஸ்வர சாமி வைராக்யானந்த்  போபாலில் செய்தியாளர்களை சந்தித்தார்.    அப்போது அவர், “நர்மதா சேவா யாத்திரை என்பது நர்மதை நதியின் கரைகளில் நடக்கும்  சட்ட விரோத செயல்களைக் கண்டறியவும் தடுத்து நிறுத்தவும் செயல்படும் யாத்திரை ஆகும்.

ஆனால் அந்த யாத்திரையை மேற்கொள்ளவிருந்த சாதுக்களுக்கு அமைச்சர் அந்தஸ்து அளிப்பது அவர்களை விலைக்கு வாங்குவதற்கு ஒப்பாகும்.   எங்கள்  பஞ்சாயதி நிரஞனி அகதா உண்மையான சாதுக்களை கொண்ட அமைப்பாகும்.   அதன் சார்பில் நான் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகானுக்கு எச்சரிகை விடுக்கிறேன்.   இது போல மலிவான நடவடிக்கைகளால் சாதுக்களை அவமானப் படுத்து வதை நிறுத்த வேண்டும்.

இல்லை எனில் எங்களைப் போன்ற உண்மையான சாதுக்கள் அவரை பதவியில் இருந்து தூக்கி எறிந்து விடுவோம்.    முந்தைய காங்கிரஸ் அரசை பதவி விலக நாங்கள் எடுத்ட முயற்சிகளை மறந்து விட வேண்டாம்.    போபாலில் எங்கள் அமைப்பில் உள்ள 13 மடாதிபதிகளைக் கொண்டு நான் நர்மதா சேவா யாத்திரையை நடத்தி உண்மைய வெளிக் கொள்கிறேன்.   அகாதாவின் உண்மையான சன்யாசியாக நான் இதை செய்ய உள்ளேன்”  எனக் கூறினார்.