போபால்:

திக் விஜய் சிங் மேற்கொண்ட நர்மதா யாத்திரை நாளை நிறைவு பெறுகிறது.

மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான திக் விஜய் சிங் நர்மதா பரிகிராம யாத்திரை மேற்கொண்டார். இந்த யாத்திரையை அவர் 2017ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி தொடங்கினார்.

தனது மனைவி அம்ரிதா ராயுடன் சுமார் 3,500 கி.மீ நடை பயணத்தை கடந்த 6 மாத காலமாக மேற்கொண்டு வருகிறார். இந்த பயணம் நாளை நிறைவு பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.