‘கமிட்டட்’ ட்விட்டரில் தனது ஸ்டேட்டஸை அப்டேட் செய்த நடிகர் ஹரிஷ் கல்யாண்

Must read

2010 ம் ஆண்டு வெளியான ‘சிந்து சமவெளி’ படத்தில் அமலா பாலுக்கு ஜோடியாக அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண்.

தொடர்ந்து ‘பியார் பிரேமா காதல்’, ‘ஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்’, ‘தனுசு ராசி நேயர்களே’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் பல்வேறு சீசனில் கலந்து கொண்ட இவர் சீசன் ஒன்னில் போட்டியாளராக இடம்பெற்றதன் மூலம் அதிக ரசிகர்களை கவர்ந்தார்.

கடந்த சில மாதங்களாக ஹரிஷ் கல்யாணுக்கு திருமணம் என்ற செய்தி பரவி வந்த நிலையில், இன்று அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்தார்.

நர்மதா உதயகுமார் என்பவருடன் பெற்றோர்கள் ஆசியுடன் தங்கள் திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதில் பதிவிட்டுள்ளார் ஹரிஷ் கல்யாண்.

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article